திருவாடானை அருகே சேற்றில் சிக்கிய பசு மாட்டை மீட்ட தீயணைப்பு துறையினர்
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா, திருவாடானை அருகே ஓரிகோட்டை பாரதி நகரைச் சேர்ந்தவர் சசிகலா இவரது பசுமாடு வழக்கம் போல் காலை மேய்ச்சலுக்குச் சென்று இரவு வரவில்லை. பின்னர் மாடு தேடிச் சென்ற போது பசு மாடு சேற்றில் சிக்கி தவித்து வந்த விவரம் தெரிந்து திருவாடானை தீயணைப்பு நிலையத்தில் தகவல் கொடுக்கப்பட்டது. உடன் திருவாடானை தீ அணைப்பு மீட்பு படையின் நிலைய அலுவலர் செங்கோல்ராஜ் தலைமையில் வந்த தீயணைப்பு மீட்பு துறையினர் பசுமாட்டை உயிருடன் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர்.



