நிர்பயா கொலையாளிகளுக்கு நாளையும் தூக்கு இல்லை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைப்பு
நிர்பயா பாலியல் பலாத்கார கொலை வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் நாளை நிறைவேற்றப்பட இருந்த தூக்குத் தண்டனை மீண்டும் தள்ளிப் போயுள்ளது.தேதி குறிப்பிடாமல் தண்டனையை டெல்லி உயர் நீதிமன்றம் காலவரையின்றி ஒத்தி வைத்துள்ளது.
நாட்டையே உலுக்கிய, டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்கார கொலை வழக்கில்,றவாளிகள் முகேஷ் சிங், பவன் குமார், வினய் சர்மா, அக்ஷய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கும் டெல்லி உயர் நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது. உச்ச நீதிமன்றமும் தண்டனையை உறுதி செய்தது.
இவர்களின் சீராய்வு மனு, கருணை மனு என அனைத்தும் நிராகரிக்கப்பட்ட நிலையில், கடந்த 22-ந் தேதியே தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் என தேதி நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இந்த குற்றவாளிகளில் ஒருவர் மாற்றி ஒருவர் ஏதேனும் காரணம் கூறி முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்து வருவதால், தூக்குத்தண்டனை பிப். 1 -ந் தேதிக்கு (நாளை) தள்ளிப்போனது. இதனால் நாளை அதிகாலை 4 பேரையும் ஒரே நேரத்தில் தூக்கில் போட ஏற்பாடுகள் தயார் நிலையில் இருந்தது.

ஆனால் குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர், தூக்குத்தண்டனைக்கு எதிராக இன்று திடீரென ஒரு மனு தாக்கல் செய்தார். இதனால் தூக்குத்தண்பனையை நிறைவேற்ற டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை தூக்குத்தண்டனையை நிறுத்த வைக்கவும் உத்தரவிட்டது.
இதனால் கொலையாளிகள் 4 பேரும், நாளை தூக்கில் தொங்க விடுவதில் இருந்து தற்காலிகமாக நிம்மதி பெற்றுள்ளனர். ஆனால், திட்டமிட்டே தூக்குத் தண்டனைக்கு எதிராக குற்றவாளிகள் தரப்பு மனுக்களை போட்டு கால தாமதம் செய்வதாக பல தரப்பிலும் குற்றச்சாட்டுகள் எழுந்து, இந்த வழக்கில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.





