மசாஜ் நிலையங்கள்,அழகு நிலையங்களில் ரெய்டு,35 இளம்பெண்கள் மீட்பு
சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் பாலியல் தொழிலில் ஈடுபடுவதாக வந்த புகாரையடுத்து காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.கடந்த இரு நாட்களாக சந்தேகத்திற்கு உட்பட்ட அழகு நிலையத்தில் சாதாரண உடையில் சென்று கண்காணித்து வந்தனர். அப்பொழுது பாலியல்தொழில் ஈடுபடுவது உறுதியானது.
இதனையடுத்து அங்கு சோதனை செய்த காவல்துறையினர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 3 இளம்பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுவது உறுதியானது. அவர்களை மீட்டு சேலம் மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.இதில் இடைத்தரகர்களாக வேலை செய்த பிரபு என்பவரை காவல்துறையினர் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
சேலம் மத்திய சிறையில் இடைத்தரகராக வேலை செய்த பிரபுவை அடைத்தனர்.பின்பு மாவட்டத்தில் உள்ள சந்தேகத்திற்கு உட்பட்ட மசாஜ் சென்டர்கள் மற்றும் அழகு நிலையங்களில் அதிரடி சோதனை நடத்திய காவல்துறையினர் ,35 இளம்பெண்களை மீட்டனர். மேலும் அந்த 35 பெண்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.






