50க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடர்புடைய நீராவி முருகன் சேலம் கோர்ட்டில் ஆஜர்
சேலம் சூரமங்கலம் அருகில் உள்ள பனங்காட்டை தேர்ந்தவர் நாகராஜ் இவருக்கு வயது 45,பைனான்ஸ் தொழில் அதிபரான இவருக்கு பல இடங்களில் ஆபத்து நேர காத்துக்கொண்டிருந்தது.அதேபோல் கடந்த வருடம் மே இரண்டாம் தேதி இவர் மர்ம நபர்கள் கடத்திச் செல்லப்பட்டார்.
மூன்று நாட்களுக்குப் பின் வீடு திரும்பிய இவர், தன்னை ஆந்திர மாநிலத்திற்கு கடத்தி சென்று 25 லட்சம் ரூபாய் பணம் கேட்டதாகவும்,காவல்துறையினர் தேடப்பட்டது தெரிந்த பிறகு அங்கேயே அவரை விட்டுச் சென்றதாகவும் அவர் கூறினார்.இந்தக் கடத்தலை நிகழ்த்தியது தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த நீராவி முருகன் ஆவான். காவல்துறையினரின் தொடர் விசாரணையில் சேலம் மாவட்டம் இளம்பிள்ளையிலுள்ள பிரம்ம மூர்த்தின் ஏர்பாட்டில் இந்த கடத்தல் நிகழ்ந்தது தெரியவந்துள்ளது.
பின்னர் கோவை சிறையில் வைத்து முருகன் மற்றும் அவனது கூட்டாளிகளை போலீசார் கைது செய்தனர். கோவை அடைக்கப்பட்டிருந்த முருகன் மற்றும் அவனது கூட்டாளி ஈஸ்வரன் ஆகியோரை நேற்று சேலம் அழைத்துவந்து,நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.அங்கிருந்து தப்பிக்க முயன்ற முருகனை போலீசார் சுற்றி வளைத்தனர் அப்போது அவனுக்கு காலில் பலத்த அடிபட்டது.
இதனையடுத்து வீல்சேரின் உதவியுடன் அவன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான்.இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க இன்ஸ்பெக்டர் செந்தில் மனு தாக்கல் செய்தார்,வழக்கை விசாரித்த நடுவர் சிவா அவர்கள் இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கினார். நீராவி முருகன் மேல் தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 21 வழக்குகள் உள்ளது. மேலும் சென்னை, கோவை ,சேலம், ஈரோடு ஆகிய பகுதிகளில் கொலை ,கொள்ளை வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.






