சிறார் ஆபாசப்படம் – பட்டதாரி இளைஞர் கைது
சிறார் ஆபாச படத்தை செல்போனில் பதிவிறக்கம் செய்து பார்த்த சென்னை அம்பத்தூரை சேர்ந்த பட்டதாரி இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை நகர பெண்கள், குழந்தைகள் குற்றம் தடுப்பு பிரிவு துணை ஆணையர் ஜெயலக்ஷ்மி மேற்பார்வையில் காவல்துறையினர் சிறார் ஆபாச படங்கள் பார்க்கும் நபர்கள் குறித்து ஆய்வு செய்தார்கள். அதில் அம்பத்தூரை சேர்ந்த ஹரிஷ் என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில் பிஎஸ்சி பட்டதாரியான அவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக தன்னுடைய செல்போனில் ஏராளமான சிறார் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து பார்ப்பது தெரியவந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தின்கீழ் அவரை கைது செய்துள்ள காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.






