--- --:--:-- --

சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க சிறப்பு வார்டு வசதி அமைக்கப்பட்டுள்ளது

1

சமீப காலங்களில் பன்றிக்காய்ச்சல், எபோலா காய்ச்சல், நிபா வைரஸ், போன்ற காய்ச்சலுக்கு மக்கள் பலியானது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும்.தற்போது இந்த வரிசையில் கொரோனா வைரஸ் வந்துள்ளது.சீனாவை பிறப்பிடமாகக் கொண்ட இந்த இந்த வைரஸ் அங்குள்ள ஆயிரக்கணக்கான மக்களிடம் பரவி நூற்றுக்கணக்கான மக்களை காவு வாங்கியுள்ளது.

 

அதுமட்டுமின்றி இந்த வைரஸ் அண்டை நாடுகளுக்கும் பரவ தொடங்கியுள்ளது,இதனையடுத்து அனைத்து நாடுகளும் இந்த கொரோனா வைரஸை எதிர்கொள்ள தங்களை தயார்படுத்திக் கொண்டு இருக்கிறது.இதனையடுத்து சேலம் மாவட்டம் அரசு மருத்துவமனையில் இந்த வைரசுக்கு சிகிச்சை அளிக்கவும்,வைரஸ் பரவுவதைத் தடுக்கவும் புதிய வார்டு 1 திறக்கப்பட்டுள்ளது.

 

இந்த வார்டில் 7 மருத்துவர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளனர் என்றும்,4 படுக்கை வசதி அமைக்கப்பட்டுள்ளது என்றும்,சுழற்சி முறையில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் பணியாற்றுவார்கள் என்றும்,முக கவசம் அனைவருக்கும் தரப்பட்டுள்ளது என்றும் சேலம் அரசு மருத்துவமனை டீன் பாலாஜிநாதன் தெரிவித்தார்.

 

மேலும் தொடர்ந்து காய்ச்சல் ,இரண்டு முதல் ஏழு வாழும் வரை தொண்டை இரும்பல், உடல் சோர்வு போன்றவை இதன் அறிகுறிகள் என்றும் இதனை முற்றிலுமாக குணப்படுத்த முடியும் என்றும்,இதை பரவாமல் தடுக்க முடியும் என்றும்,போதிய மருத்துவ வசதி இருக்கிறது என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

Right Menu Icon