குரூப்-2 ஏ தேர்வில் முறைகேடு..? விசாரணை தீவிரம்
குரூப்-2 ஏ தேர்வில் முறைகேடு நிகழ்ந்ததாக கூறப்படும் புகார் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. குரூப்-4 தேர்வை போன்றே குரூப் 2ஏ தேர்விலும் ராமேஸ்வரம் தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் தரவரிசையில் முன்னிலை பெற்று இருக்கிறார்கள் என்ற புகார் தேர்வர்கள் தரப்பில் ஏழுப்பப்பட்டது.
அது சார்ந்த விசாரணையையும் முன்பே தொடங்கிய டிஎன்பிஎஸ்சி தற்போது அதை தீவிரப்படுத்தியுள்ளது. முறைகேடு புகார் உறுதியானால் குரூப் 4 இல் எடுக்கப்பட்ட அதை நடவடிக்கை குரூப் 2ஏ தேர்விலும் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குரூப்-4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக 99 பேருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.
மேலும் காவல் துறை புகார் அளிக்கப்பட்டு சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டு வருகிறது. குரூப்-4 தேர்வில் நியமனங்கள் நடைபெறாத நிலையில் குரூப்-2 தேர்வில் நியமனங்கள் முடிந்து பணியில் சேர்ந்து விட்டனர். எனவே முறைகேடு மூலம் பணிக்கு தேர்வானவர்கள் மட்டும் பணி நீக்கம் செய்யப்படுவார்களா அல்லது அனைத்து நியமனங்களும் ரத்து செய்யப்படுமா? என்பன போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.






