8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாலையில் சிறப்பு வகுப்பு?
எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு எதுவும் இல்லை என தொடக்கக் கல்வி இயக்குனரகம் விளக்கமளித்துள்ளது. பொதுத்தேர்வு எழுத இருப்பதால் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேரத்தில் ஒரு மணி நேரம் சிறப்பு வகுப்பு நடத்த வேண்டும் என ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பி இருந்தார்.
இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் சிறப்பு வகுப்பு ஏதும் நடத்தப்படாது என தொடக்கக் கல்வி இயக்குனரகம் தெளிவுபடுத்தியுள்ளது.






