--- --:--:-- --

சேலம் மாவட்டத்தில் புதிதாக துவங்கப்பட்டுள்ள போக்சோ நீதிமன்றத்தின் முதல் தண்டனை

1

சேலம் மாவட்டத்தில் கடந்த மாதம் புதிதாக ஒரு போக்சோ நீதிமன்றம் துவங்கப்பட்டது,இதில் முதல் தண்டனையாக சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கிற்கு தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. சேலம் கொண்டலாம்பட்டியை சேர்ந்த தறி தொழிலாளி வெங்கடேஷ் என்பவர்,15 வயது சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்வதாக கூறி வந்துள்ளார்.

 

கடந்த 2016ம் ஆண்டு வீட்டில் யாரும் இல்லாத பொழுது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.இதுகுறித்து சிறுமியின் தாயார் சேலம் டவுன் மகளிர் போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார்,இதையடுத்து வெங்கடேசன் மீது வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

 

இந்த வழக்கை போக்சோ நீதிமன்றத்தில் விசாரித்த நீதிபதி முருகானந்தம்,வெங்கடேஷிர்க்கு 50 ரூபாய் அபராதமும் ஆயுள் தண்டனையும் விதித்துள்ளார்.மேலும் சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் 3 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகையை வழங்கவும் பரிந்துரை செய்தார்.அரசுத் தரப்பில் ஹேமலதா என்பவர் வாதிட்டார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon