சென்னை மைசூர்பாகுவிற்கு ரசிகையாக மாறிய நடிகை தீபிகா படுகோன்
சென்னையில் இருந்து ஒரு கிலோ மைசூர்பாக்கு, இரண்டரை கிலோ சிப்ஸ் வாங்கி வருமாறு கணவருக்கு நடிகை தீபிகா படுகோன் கட்டளையிட்டது ரசிகர்களை கவர்ந்துள்ளது. கிரிக்கெட் உலக கோப்பையை வென்ற கபில்தேவ் தலைமையிலான அணி குறித்த கதை ரன்வீர் சிங் நடிப்பில் படமாகியுள்ளது.
இந்த படிப்பின் சுவரொட்டி வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள வந்த கணவர் ரன்வீர் சிங்கிடம் சென்னையிலிருந்து வரும் போது கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இலிருந்து ஒரு கிலோ மைசூர்பாகு, ஹாட் சிப்ஸ் இல் இருந்து இரண்டரை கிலோ உருளைக்கிழங்கு சிப்ஸ் வாங்காமல் வீட்டுக்கு வரவேண்டாம் என்று டுவிட்டரில் மனைவி தீபிகா படுகோன் கட்டளையிட்டிருந்தார்.
இந்த கருத்து இணையத்தில் பலராலும் ரசிக்கப்பட்டுள்ளது.






