பள்ளி பேருந்தின் மீது கார் மோதி விபத்தின் சிசிடிவி காட்சிகள்
திண்டுக்கல் மாவட்டம் காக்கா தோப்பில் பள்ளிப் பேருந்து மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் காயமடைந்து பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. திருச்சியை சேர்ந்த சுஜித்ரா என்பவர் தனது ஓட்டுநருடன் மதுரை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்.
காக்கா தோப்பு நான்கு வழி சாலையில் கார் அதிவேகமாக சென்ற போது சாலையை கடப்பதற்காக குறுக்கே சென்ற தனியார் பள்ளி பேருந்து மீது பலமாக மோதி குலுங்கி நின்றது. இந்த விபத்தில் காரின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்து அதில் இருந்த இருவரும் காயம் அடைந்தனர்.
அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து மோதியது விபத்திற்கான காரணம் என கூறப்படும் நிலையில் பள்ளி பேருந்தில் இருந்த மாணவர்களுக்கு நல்வாய்ப்பாக எவ்வித காயங்களும் ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.






