கிருஷ்ணகிரியில் பேருந்தில் ஏற முயன்ற சிறுவன் சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தனியார் பள்ளி பேருந்தில் ஏற முயன்ற 3 வயது சிறுவன் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார். அந்த கிராமத்தை சேர்ந்த வேடியப்பனின் 3 வயது மகன் குருபிரசாத் பள்ளி பேருந்தில் ஏறிய தனது தோழியை பின்தொடர்ந்து உள்ளான்.
தோழி ஏறிய பிறகு அவனும் பேருந்தில் ஏற்றப்பட்டு உள்ளான். சிறுவன் படிகளில் ஏறிக் கொண்டு இருப்பதை அறியாமல் ஓட்டுநர் பேருந்தை இயக்கி உள்ளார். இதில் சக்கரத்தில் சிக்கி சிறுவன் குருபிரசாத் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.






