பள்ளி மாணவ மாணவிகளுக்கு தொற்று நோய் ஏற்படும் முன் அப்பகுதி மக்கள் மீதும் அக்கறை காட்டுமா ராமநாதபுரம் நகராட்சி
ராமநாதபுரம் பயணியர் பங்களா அருகே அப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் குப்பை குவிக்கப்படுகிறது. இதில் அப்பகுதியில் சுற்றித்திரியும் நாய்கள் உள்ளிட்ட கால்நடைகள் இரை தேடுகின்றன.

இந்நிலையில் குப்பை குவிக்கப்படும் இடத்தில் இறந்த பசு கடந்த இரண்டு நாட்களாக அப்புறப்படுத்தப்படாமல் உள்ளது. இறந்த பசுவை நாய்கள் இரையாக உண்டு வருவதால் துர்நாற்றம் எடுத்துள்ளது. இதனால் அப்பகுதியை கடக்கும் மாணவ, மாணவியர் உள்ளிட்ட பொதுமக்கள் முகம் சுளித்தவாறு செல்கின்றனர்.

இது அப்பகுதி மக்கள் கூறுகையில் , குவிந்துள்ள குப்பை அகற்றப்படவில்லை. இறந்த பசு மாட்டை அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து சுகாதாரம் பேண வேண்டும் என்கின்றனர் இப்பகுதி வாழ் மக்கள்.






