நித்யானந்தா இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டதா?
தலைமறைவாக இருந்து வரும் நித்யானந்தா கியூபா மெக்சிகோ அருகிலுள்ள கரீபியன் தீவில் பதுங்கி இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான நித்தியானந்தா மீது கடத்தல் வழக்குப் பதிவு செய்யப்பட்டதால் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற அவர் தலைமறைவானார்.
இதையடுத்து இன்டர்போல் உதவியுடன் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்பேரில் சிபிஐ மூலம் சர்வதேச போலீசை அனுகிய குஜராத் போலீசார் நித்யானந்தாவைப் பிடிக்க உதவி கோரியதையடுத்து அவருக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில் நித்தியானந்தா கரீபியன் தீவில் உள்ள குட்டி நாடான பெலிஜில் பதுங்கி இருப்பதாகவும் அந்நாட்டு குடிமக்களுக்கு வழங்கப்படும் பாஸ்போர்ட்டை வாங்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.






