ஆத்தூரில் குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்
சேலம் மாவட்டம் ஆத்தூரில் அனைத்து ஜமாத் கூட்டமைப்பின் சார்பில்,குடியுரிமை சட்டத் திருத்தத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது . ஆத்தூர் பழைய பேருந்து நிலையம் முன்பு,ஆத்தூர் பகுதியில் உள்ள அனைத்து ஜமா அத் கூட்டமைப்பு சார்பில் , குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக் கோரி கண்டன ஆர்ப் பாட்டம் நடந்தது .
அப்துல் ஜப்பார் தலைமை வகித்தார் . காதர் மொய்தீன் , முகமது , அமீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர் . முன்னாள் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் ஹைதர் அலி ,முகமது பயாஸ் ஆகி யோர் கண்டன உரை யாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் திமுக நகர செயலாளர் பாலசுப்ரமணியம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் முருகேசன், திராவிடர் கழக மாவட்ட தலைவர் வானவில் , நகர காங்கிரஸ் தலைவர் முருகேசன் , திமுக மாவட்ட செயலாளர் கோபால்ஜி , திராவிடர் கழக மாவட்ட துணை செயலாளர் மகேந்திரன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சின்னதுரை , விடுதலை சிறுத்தைகள் கட்சி செல்வம் ஆகி யோர் கலந்து கொண்டனர்.






