திருவாடானை ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிந்தும் அகற்றபடாத பேரிகார்டுகளால் விபத்து அபாயம் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, திருவாடானையில் 2 மாவட்ட கவுன்சிலர்கள், 20 ஒன்றிய கவுன்சிலர்கள், 47 ஊராட்சி தலைவர்கள் , 336 ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடை பெற்று பதிவான வாக்குகள் திருவாடானை அரசு கலை அறிவியல் கல்லூரியில் எண்ணும் பணி நடைபெற்றது.
இதற்காக காவல் துறை சார்பில் திருவாடானை சப்டிவிஷனில் விபத்தை ஏற்படுத்தும் பகுதிகளில் விபத்தை தடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த இடங்களில் பயன்படுபடுத்திய பேரிகார்டுகள் கொண்டு வரப்பட்டு பாதுகாப்பிற்கு பயன்படுத்தினர்.

வாக்கு எண்ணிக்கை முடிந்து வெற்றி பெற்றவர்கள் பதவிஏற்று பல நாட்கள் ஆகியும் இந்த பேரி கார்டுகள் அகற்றப்படாமல் ஆங்காங்கே விழுந்து கிடக்கிறது. இதனால் ஏற்கனவே விபத்தை தடுக்கும் இடங்களில் வைக்கப்படாமல் உள்ளதால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.
இதையெல்லாம் சரிசெய்ய வேண்டிய நேர்மையான காவல் துணைக்காணிப்பாளர் ஏன் இவ்வாறு உள்ளார் என்பது வியப்பாக உள்ளது என மக்கள் தரப்பில் பேசப்படுகிறது. எது எப்படியோ விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தார்கள்.






