--- --:--:-- --

5 மாவட்ட தலைநகரங்களில் திமுக 28ம் தேதி ஆர்ப்பாட்டம்

11

ஹைட்ரோகார்பன் திட்டத்தை திரும்ப பெற்று காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க கோரி 5 மாவட்ட தலைநகரங்களில் 28ஆம் தேதி திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் 341 க்கும் மேற்பட்ட ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கான ஆய்வு கிணறுகள் தோண்ட, சுற்றுச்சூழல் அனுமதி, மக்கள் கருத்துகேட்பு கூட்டம் தேவையில்லை என்று மத்திய அரசு அறிவித்திருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

 

மத்திய அரசு மற்றும் மாநில அரசின் விவசாயிகள் வெகு மக்கள் விரோத செயல்களை கண்டித்து தஞ்சை, திருவாரூர், நாகை ,புதுக்கோட்டை, கடலூர் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon