--- --:--:-- --

வில்சன் கொலை வழக்கு – என்ஐஏவுக்கு மாற்ற மத்திய உள்துறைக்கு தமிழக அரசு பரிந்துரை

9

சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கு விசாரணையை என்‌ஐ‌ஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்ற மத்திய உள்துறைக்கு தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது . கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் பணியில் இருந்த எஸ்எஸ்ஐ வில்சன் கடந்த 8ஆம் தேதி சுட்டுக்கொல்லப்பட்டார் .

 

இந்த வழக்கில் பயங்கரவாதிகளுக்கு தொடர்பு இருப்பது காவல்துறையின் விசாரணையில் தெரியவந்தது. அவர்கள் மீது உபா எனப்படும் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பொதுவாக உபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டால் அது குறித்த தகவலை 15 நாட்களுக்குள் மத்திய உள்துறைக்கு தெரிவிக்க வேண்டும்.

 

அதன்படி வில்சன் கொலை வழக்கு குறித்தும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த வழக்கை என்‌ஐ‌ஏ விசாரணைக்கு மாற்றும்படி மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது. வில்சன் கொலை வழக்கு தொடர்பான ஆவணங்களை மத்திய அரசு என்‌ஐ‌ஏ வுக்கு அனுப்பியுள்ளது.

 

பயங்கரவாதிகளுக்கு தொடர்பு இருப்பதால் வில்சன் கொலை வழக்கு விசாரணையை என்‌ஐ‌ஏ ஏற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே தவ்ஃபீக் மற்றும் அப்துல் சமீம் 10 நாட்கள் காவலில் எடுத்துள்ள தமிழக காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon