--- --:--:-- --

உடல் உறுப்புகள் செயலிழந்து தவிக்கும் மின்பணியாளர்

2.1

சிவகங்கை மாவட்டத்தில் உடல் உறுப்புகள் செயல் இழந்து மூன்று பெண் குழந்தைகள் உடன் வறுமையில் வாடி வரும் மின்பணியாளர் ஒருவர் தனது வாழ்வாதாரத்திற்கு கருணை உள்ளம் கொண்டவர்கள் உதவுமாறு கோரியுள்ளார். சிவகங்கை மாவட்டம் அருளிப் பட்டியை சேர்ந்தவர் சுரேஷ்.

 

எலக்ட்ரீசியன் ஆக பணியாற்றி வந்த இவர் கடந்த ஆண்டு மின்சாரம் தாக்கியதில் மின் கம்பத்தில் இருந்து கீழே விழுந்ததில் இடுப்பு முறிவு ஏற்பட்டு வீட்டில் முடங்கியுள்ளார். இதனால் தமது மூன்று பெண் குழந்தைகள் உட்பட நான்கு குழந்தைகளையும் வளர்க்க மிகவும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளார்.

இவரது உடல்நிலை சரியாக அதிகம் செலவாகும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரது மனைவி 100 நாள் வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். எனவே சுரேஷ் கஷ்டப்படுவதாகவும் அதனால் தமக்கு உதவி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon