பெண் துணை ஆட்சியர் தலைமுடியை இழுத்து தாக்க முயற்சி! ஒருவர் கைது
மத்திய பிரதேச மாநிலம் ராஜ்கரில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக நடந்த பேரணியின் போது பெண் துணை ஆட்சியரின் தலைமுடியை இழுத்து தாக்க முயன்றவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராஜ் கரில் பாரதிய ஜனதா தொண்டர்கள் அனுமதியை மீறி குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பேரணி நடத்த முற்பட்டனர். அவர்களை காவல்துறையினர் தடுக்க முயன்றதால் இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது துணை ஆட்சியர் பிரியா வர்மாவின் தலைமுடியை இழுத்து சிலர் தாக்க முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து இந்த சம்பவத்தில் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதற்கிடையே பேரணி செல்ல முயன்ற போது பாரதிய ஜனதா தொண்டர் ஒருவரின் கன்னத்தில் அறைந்த மாவட்ட ஆட்சியர் நிவேதாவுக்கு எதிராக மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.





