எஸ்.ஐ வில்சன் கொலை வழக்கு: மூளையாக செயல்பட்ட மெகபூப் பாஷா கைது
களியக்காவிளை எஸ்எஸ்ஐ வில்சன் கொலைக்கு மூளையாக செயல்பட்டதாக அலுமா அமைப்பின் தலைவர்களில் ஒருவரை பெங்களூர் காவல்துறை கைது செய்துள்ளது. குமரி மாவட்டம் களியக்காவிளையை சேர்ந்த எஸ்ஐ வில்சன் கடந்த எட்டாம் தேதி சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட தவ்பீக் மற்றும் அப்துல் சலீம் ஆகியோர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே கைது செய்யப்பட்ட அலுமா அமைப்பை சேர்ந்த மூவரிடம் வில்சன் கொலை குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் அலுமா அமைப்பின் தலைவர்களில் ஒருவரான மெகபூ பாட்ஷாவை பெங்களூர் காவல்துறையினர் கைது செய்தனர். இதனையடுத்து விசாரணையில் மெகபூ பாஷா கொலைக்கு மூளையாக செயல்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரில் பதுங்கியிருந்த அவரை கைது செய்த காவல்துறையினர் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






