--- --:--:-- --

எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்த நாள் : இபிஎஸ், ஓபிஎஸ் மாலை அணிவித்து மரியாதை!!

9

மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

 

அதிமுக நிறுவனரும் முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்த நாள் விழாவை, தமிழகம் முழுவதும் அக் கட்சியினர் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிலைக்கும், முதல்வர்எ டப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் கூடியிருந்த தொண்டர்களுக்கு இனிப்புகளை இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் வழங்கினர்.

 

இதே போல் தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்கள், அலங்கரிக்கப்பட்ட எம்.ஜி.ஆர். படத்திற்கு மாலை அணிவித்தும் ,இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். எம்.ஜி.ஆர். பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் பொதுக் கூட்டங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon