--- --:--:-- --

காதலிக்காக களமாடிய ஜல்லிக்கட்டு வீரர்

1

ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்குபவர்களுக்கு பெண்களை மணம் முடித்துக் கொடுப்பதாக வரலாற்றுக்குறிப்புகள் கூறுகின்றனர். இதன் அடுத்த கட்டமாக மணமுடிக்க இருக்கும் இளைஞரை ஊக்குவித்து அவரை ஜல்லிக்கட்டில் களமாட இளம்பெண் இசைவு தெரிவித்த விந்தை அவனியாபுரத்தில் நிகழ்ந்தது. வீரமும், காதலும் தமிழர் வரலாற்றில் பின்னிப்பிணைந்த அம்சங்கள்.

 

இந்த இரண்டின் வெளிப்பாடுகள் தமிழர்களின் பண்டிகைகளிலும், கொண்டாட்டங்களிலும் வெளிப்படும். பொங்கல் பண்டிகையையொட்டி நடத்தப்படும் ஜல்லிக்கட்டில் பின்னணியும் இதுதான். இந்த உண்மையை மீண்டும் ஒருமுறை உலகுக்கு பறைசாற்றியுள்ளனர் மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஒரு ஜோடி. முத்து பட்டியை சேர்ந்த இவரது பெயர் திருநாவுக்கரசு.

 

மதுரை மட்டுமின்றி தென்மாவட்டங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டில் வாடிவாசல் முன்னே இவரை பார்க்கமுடியும். இவருக்கு நந்தினி என்பவரோடு அடுத்த மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. வழக்கம்போல அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் களமாடினார் திருநாவுக்கரசு. தன் வருங்கால மனைவி கரஒலி எழுப்ப உற்சாகப்படுத்த இறுதிவரை களத்தில் நின்று 10 காளைகளை வென்று மூன்றாவது பரிசை வசமாக்கினார் திருநாவுக்கரசு.

 

தனது வருங்கால கணவர் தொடர்ந்து ஜல்லிக்கட்டில் பங்கேற்பதை ஊக்கப்படுத்த இருப்பதாக கூறுகிறார் நந்தினி. இந்த ஆண்டும் அடுத்தடுத்து நடத்தியிருக்கும் ஜல்லிக்கட்டுகளிலும் திருநாவுக்கரசு களமிறங்கி பரிசுகளை வெல்ல வேண்டும் என்பதே நந்தினியின் விருப்பமாகும்.

Leave a Reply

Right Menu Icon