தப்பான ஆட்டம்… 21 நடிகைகள் கைது..!
தெலுங்கானா மாநிலம் ஜூப்லி பகுதியில் உள்ள கிளப் ஒன்றில் தெலுங்கு திரையுலகை சேர்ந்த துணை நடிகைகளை அழைத்து வந்து அரைகுறை ஆடையுடன் ஆட வைப்பதாக ஜூபிலி ஹில்ஸ் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
காவல்துறையினர் அதிரடியாக நுழைந்ததும் நிகழ்ச்சிக்கு நடிகைகளை அழைத்து வந்த புரோக்கர் பிரசாத் மற்றும் கிளப் உரிமையாளர் மற்றும் நடனத்தை ரசிக்க வந்தவர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். அரைகுறை உடையுடன் ஆடிக்கொண்டிருந்த 21 நடிகைகள் தப்பியோட இயலாமல் அங்கேயே சிக்கிக்கொண்டனர்.
பின்னர் அவர்கள் ஆடைகளை மாற்றிக் கொள்ள அவகாசம் அளித்து காவல்துறையினர் 21 நடிகைகளையும் கைது செய்தனர். முகத்தை மூடியபடி வந்த நடிகைகள் அனைவரையும் அவர்கள் நடனம் ஆடுவதற்காக வந்த மினி பேருந்தில் ஏற்றி ஜூப்லி ஹில்ஸ் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
பேருந்திலிருந்து தங்களது மூட்டை முடிச்சுகளுடன் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட போது முகத்தை மறைத்திருந்த நடிகை ஒருவர் தங்களை படம் பிடித்துக் கொண்டிருந்த செய்தியாளரை தாக்கினார். அதோடு அவர் கையில் வைத்திருந்த கேமராவையும் தட்டிவிட்டார். உடனடியாக அங்கு வந்த காவல்துறையினர் அந்த நடிகையை எச்சரித்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.






