பாதாள சாக்கடையில் விழுந்த பசுமாடு மீட்பு
கோயம்பேட்டில் பாதாள சாக்கடையில் விழுந்த பசுமாடு ஒன்று தீயணைப்புத் துறையினரால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. கோயம்பேடு சந்தை பகுதியை சுற்றிலும் ஏராளமான மாடுகள் பராமரிப்பு இன்றி சுற்றி வருகின்றன. இந்த நிலையில் முகப்பு மூடாமல் இருந்த கழிவுநீர் கால்வாயில் விழுந்த அந்த பசுவை கண்ட பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர் மயக்க நிலையில் இருந்த பசுவிற்கு முதலில் பழங்கள் போன்ற உணவுப் பொருட்களை வழங்கினர். அதைத்தொடர்ந்து ஜேசிபி இயந்திரம் கொண்டு கழிவு நீர் கால்வாயில் மேற்கூரையை உடைத்து கயிறுகட்டி பசுவினை பத்திரமாக வெளியே கொண்டு வந்தனர்.






