--- --:--:-- --

எஸ்.ஐ வில்சனை சுட்டுக்கொன்ற கொலையாளிகள் பிடிபட்டனர்…! தவ்பிக், அப்துல் சமீம் இருவரும் கர்நாடகாவில் கைது!!

8a98ef79-dbe0-4a6c-959a-0fe9c22e79d8

கன்னியாகுமரி அருகே காவல் சிறப்பு உதவி ஆய்வாளரை சுட்டுக்கொன்ற கொலையாளிகள் தவ்பிக் மற்றும் அப்துல் சமீம் இருவரும் கர்நாடக மாநிலம் உடுப்பியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

தமிழக – கேரள எல்லையில் உள்ள களியக்காவிளை சோதனைச் சாவடியில், கடந்த 8-ந்தேதி எஸ்.ஐ. வில்சன் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தப் படுகொலையை செய்தது தவ்பீக், அப்துல் சமீம் என்ற இரு இளைஞர்கள் என்பதும், இந்தச் சம்பவத்தில் பயங்கரவாதிகளின் பின்னணி இருப்பதும் தெரிய வந்தது.

இதனால் கொலையாளிகள் இருவரின் புகைப்படங்களை வெளியிட்டு தமிழக, கேரள போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் அடுத்தடுத்து திருப்பங்கள் ஏற்பட்டு, கொலையாளிகளுக்கு துப்பாக்கி வாங்கிக் கொடுத்த நபரை பெங்களூருவில் போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே பெங்களூருவில் பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இதனால் பயங்கரவாதிகள் மிகப் பெரும் சதித் திட்டம் தீட்டியிருப்பது உறுதியானது.

 

இந்நிலையில், எஸ்.ஐ.வில்சனை கொலை செய்த குற்றவாளிகள் அப்துல் சமீம் மற்றும் தவ்பீக் ஆகியோரும் கர்நாடக மாநிலத்தில் பதுங்கி இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.கர்நாடக போலீசாருடன் இணைந்து தமிழக போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்திய நிலையில் கொலையாளிகள் அப்துல் சமீம், தவ்பிக் இருவரும் உடுப்பியில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

இருவரையும் சென்னைக்கு அழைத்து வந்து விசாரிக்க தமிழக போலீசார் முடிவு செய்துள்ளதாகவும்,விசாரணையில் பயங்கரவாதிகளின் சதித் திட்டம் குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon