--- --:--:-- --

ஆஸ்கார் தகுதிப் பட்டியலில் இடம் பெற்ற ஒத்த செருப்பு படம் பரிந்துரைப் பட்டியலில் இடம் பெறவில்லை

3

தமிழ் திரையுலகமே ஆவலோடு எதிர்பார்த்த பார்த்திபன் இயக்கத்தில் உருவான ஒத்த செருப்பு திரைப்படம் ஆஸ்கர் பட்டியலில் இடம் பெறவில்லை. தனி ஒரு மனிதனாக ஒரு முழு திரைப்படத்தையும் எடுப்பது அவ்வளவு சாதாரண காரியம் அல்ல.

 

ஆனால் அந்த புதிய முயற்சியை மேற்கொண்டு வெற்றி பெற்றவர் இயக்குனர் பார்த்திபன். பார்த்திபன் இயக்கத்தில், எழுத்தில், நடிப்பில், தயாரிப்பில் உருவான திரைப்படம் ஒத்த செருப்பு. இந்த திரைப்படமானது கடந்த ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

 

முழு திரைப்படத்தில் இயக்குனர் பார்த்திபன் அவர்கள் நடித்து இயக்கி இருந்ததால் இந்த திரைப்படமானது ஆசிய சாதனை புத்தகத்திலும், இந்திய சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றிருந்தது. இந்த திரைப்படத்தை எப்படியாவது ஆஸ்கர் பட்டியலுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக இயக்குனர் பார்த்திபன் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்.

 

ஆனால் இன்று வெளியான ஆஸ்கர் பட்டியலில் இந்த திரைப்படமானது இடம்பெறவில்லை. இதனைத் தொடர்ந்து இயக்குனர் பார்த்திபன் அவர்கள் தன்னுடைய கருத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில் எலிஜபிலிட்டி பட்டியலில் இடம்பெற்றிருந்த ஒத்த செருப்பு திரைப்படமானது நாமினேஷன் பட்டியலில் இடம் பெறவில்லை.

 

அதனால் தொடர்ந்து இந்த மாதிரியான புதிய முயற்சிகளை மேற்கொள்வேன் என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon