--- --:--:-- --

பொங்கல் பரிசு தொகுப்பு : 21-ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு!!

2

ஆயிரம் ரூபாயுடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு வரும் 21-ந் தேதி வரை வழங்கப்படும் என கால அவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

 

தைப்பொங்கலை முன்னிட்டு, குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 1000 ரூபாய் பணத்துடன் 2 அடி கரும்பு, அரிசி, சர்க்கரை, முந்திரி பருப்பு, உலர் திராட்சை, ஏலக்காய் ஆகிய பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு இலவசமாக வழங்கப்படும் என அறிவித்து கடந்த 9-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை ரேசன் கடைகளில் வழங்கப்பட்டது. விடுபட்டவர்களுக்கு நின்று வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

 

இந்நிலையில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் இந்த பரிசுத் தொகுப்பை வாங்கிவிட்ட நிலையில் விடுபட்டவர்கள் வரும் 21-ம் தேதி வரை வாங்கிக்கொள்ளலாம் என கால அவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon