--- --:--:-- --

சுட்டுக்கொல்லப்பட்ட எஸ்.ஐ.வில்சன் குடும்பத்திற்கு ரூ.1 கோடி..! முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்!!

4

கன்னியாகுமரி அருகே பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சிறப்பு எஸ்.ஐ வில்சன் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

 

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் உள்ள சோதனைச் சாவடியில் பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் கடந்த 8-ந்தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். அவரை சுட்டுக்கொன்ற நபர்கள் அப்துல் சமீம், தவ்பிக் என்பதும் இருவரும் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. இதனால் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

சுட்டுக் கொல்லப்பட்ட வில்சன் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் ரூ.1 கோடி நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.அதன்படி இன்று சென்னை தலைமை செயலகத்திற்கு வில்சனின் மனைவி மற்றும் இரு மகள்கள் வரவழைக்கப்பட்டனர்.

 

வில்சனின் மனைவி மகள்களுக்கு ஆறுதல் கூறிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ரூ.1 கோடிக்கான காசோலையும் வழங்கினார். தமது மூத்த மகளுக்கு அரசு வேலை விரைவில் வழங்கப்படும் எனவும், கொலையாளிகள் விரைவில் கைது செய்யப்பட்டு உரிய தண்டனை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என முதல்வர் உறுதி அளித்ததாக வில்சன் மனைவி தெரிவித்தார்.

Leave a Reply

Right Menu Icon