--- --:--:-- --

பொங்கலையொட்டி சென்னை மெட்ரோவில் 50% கட்டண சலுகை..!

3

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 15, 16, 17 ஆகிய மூன்று நாட்களுக்கு சென்னையில் மெட்ரோ ரயில் பயண கட்டத்தில் 50 விழுக்காடு சலுகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் 50 விழுக்காடு கட்டண சலுகை வழங்கப்படும் என ஏற்கனவே மெட்ரோ நிர்வாகம் அறிவித்திருந்தது. அதன்படி பொங்கல் பண்டிகையான வரும் 15ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை இச்சலுகை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் காணும் பொங்கல் அன்று மெரினா கடற்கரை செல்ல வரும் பயணிகளுக்கு ஏதுவாக அரசினர் தோட்டம் மற்றும் பிஎம்எஸ் மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து மெரினாவிற்கு பேருந்து சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் மெட்ரோ நிர்வாகம் அறிவித்திருக்கிறது.

Leave a Reply

Right Menu Icon