சர்ச்சையில் சிக்கிய தர்பார் வசனம் : வழக்கு தொடரப்படும், என சசிகலா வழக்கறிஞர் தகவல்
தர்பார் திரைப்படத்தில் சசிகலா குறித்து உள்நோக்கத்தோடு வசனம் பேசியிருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தில் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
பெங்களூர் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா சிறையை விட்டு வெளியே ஷாப்பிங் சென்று வந்ததாக எழுந்த புகாரில் துளியும் உண்மை இல்லை என்று வழக்கறிஞர் ராஜா செந்தில் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இந்த புகார் குறித்து விசாரணை மேற்கொண்ட டிஐஜி அதிகாரி வினய் குமாரும், காவல்துறை அதிகாரி ரூபாவும் சிறைச்சாலையை விட்டு சசிகலா வெளியே சென்றார் என எங்கும் குறிப்பிடவில்லை என்று தெரிவித்த அவர் இந்த நிலையில் உள்நோக்கத்தோடு தர்பார் படத்தில் சசிகலாவை குறித்த வசனம் இடம் பெற்றிருந்தால் அதில் நடித்த நடிகர் ரஜினி, இயக்குனர், தயாரிப்பாளர் மீது வழக்கு தொடரும் எனவும் தெரிவித்துள்ளார்.





