--- --:--:-- --

நெருப்பை உண்ணும் விநோத நேர்த்திக்கடன்…!

7

புதுக்கோட்டை மாவட்டம் புல்லான் விடுதியில் நடைபெற்ற நோன்பு விழாவில் பக்தர்கள் நெருப்பை உண்ணும் வினோத நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள். புல்லான் விடுதிகளில் உள்ள கற்பக விநாயகர் கோவில் நோன்பு விழா கொண்டாடப்பட்டது.

 

இதில் பிள்ளையாருக்கு உகந்த 21 பதார்த்தங்களில் கற்பக விநாயகருக்கு படையல் வைக்கப்பட்டது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தீயுடன் இருந்த மாவிளக்கை தீயுடன் சாப்பிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நெருப்பை உண்டது காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

Leave a Reply

Right Menu Icon