இட்லி, பரோட்டா, தண்ணீர் பாட்டில் தலா ரூ.1க்கு விற்பனை – அசத்திய ஹோட்டல்
புத்தாண்டை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் ஒரு ரூபாய்க்கு இட்லி, பரோட்டா விற்பனை செய்யப்பட்டது. ஆரணி டவுன் சைதாப்பேட்டையில் இருக்கும் பிருந்தா உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு இட்லி, பரோட்டா, அரை லிட்டர் தண்ணீர் பாட்டில் ஆகியவை தலா ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து பொதுமக்கள் குடும்பத்தோடு கூட்டம் கூட்டமாக சென்று உணவருந்தி புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர்.






