--- --:--:-- --

தேனியில் ரவீந்திரநாத் குமார் அலுவலகத்தை முற்றுகையிட்ட இஸ்லாமிய அமைப்பினர்

12

தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் அலுவலகத்தை இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்தவர்கள் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தேனி மக்களவை உறுப்பினர் அலுவலகத்தை சிலர் முற்றுகையிட உள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் கிடைத்தது.

 

இதனையடுத்து பெரியகுளம் தென்கரை பகுதியில் உள்ள எம்பி அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட முயன்ற இஸ்லாமிய அமைப்பினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதன் காரணமாக இஸ்லாமிய அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon