திருவாடானையால் ஹனுமன் ஜெயந்தி 1008 கலச பூஜை
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, திருவாடானையில் ஸ்ரீ ஹனுமான் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் இன்று அனுமன் ஜெயந்தி நடைபெற உள்ள நிலையில், நேற்றே முன்னதாக கோவிலில் அனுமனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு 1008 கலசங்களில் புனித நீர் வைத்து சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க பூஜை செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டார்கள் இன்று அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் அதனைத் தொடர்ந்து அன்னதானமும் நடைபெற உள்ளது.





