தென் தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை
தென் தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் நெல்லை, ராமநாதபுரம், நாகை, நீலகிரி போன்ற மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னையில் சில நேரங்களில் கன மழை பெய்தாலும் பெரும்பாலும் வெயில் அடித்து வருகிறது. இந்நிலையில் வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளது. இதனிடையே தூத்துக்குடி, ராமநாதபுரம், நெல்லை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் தமிழகம் மற்றும் கேரளாவில் பல இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த மழை அடுத்த சில நாட்களுக்கு நீடிக்கும் எனவும் அதனை தொடர்ந்து இம்மாத இறுதியில் வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வரும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




