--- --:--:-- --

நித்யானந்தாவுக்கு எதிராக ஆட்கொணர்வு மனு தாக்கல்

5

நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் உள்ள உறவினரை மீட்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஈரோட்டை சேர்ந்த பிரகாஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

 

அதில் தனது மைத்துனர் பிரானாசாமி என்பவர் கடந்த 15 ஆண்டுகளாக நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் இருந்ததாகவும், அவரை பார்த்து பேச அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 5 மாதங்களாக அவரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 

எனவே நித்தியானந்தாவின் சட்டவிரோத காவலில் இருந்து தனது மைத்துனர் பிரானாசாமியை மீட்டு ஆஜர்படுத்த வேண்டும் என அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நித்யானந்தாவின் மீது குஜராத், கர்நாடகா நீதிமன்றங்களில் ஏற்கனவே வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.

Leave a Reply

Right Menu Icon