--- --:--:-- --

ஜார்க்கண்ட் 3 ஆம் கட்ட தேர்தல் – வாக்களித்த தோனி

5

ஜார்கண்ட் மாநிலத்தில் மூன்றாம் கட்டமாக நடைபெற்ற தேர்தலில் 62.6 விழுக்காடு வாக்குகள் பதிவாகி இருக்கின்றன. ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஐந்து கட்டமாக தேர்தல் நடைபெறும் நிலையில் மூன்றாம் கட்டமாக 17 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

 

தலைநகரம் ராஞ்சி, ஹார்டியா, ராம் கார், காங்கே ஆகிய தொகுதிகளில் மாலை 5 மணிவரையும் நக்சல் பாதிப்பு அதிகமுள்ள 13 தொகுதிகளில் மாலை 3 மணி வரையும் வாக்குப்பதிவு நடைபெற்றது. ராஞ்சியில் உள்ள வாக்கு பதிவு மையத்தில் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி தனது வாக்கை பதிவு செய்தார்.

 

நான்காவது கட்டமாக 16ஆம் தேதியும் இறுதியாக டிசம்பர் மாதம் 20ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பதிவான வாக்குகள் அனைத்தும் டிசம்பர் மாதம் 23 ஆம் தேதி எண்ணப்படுகின்றன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon