ஸ்பாட் ஃபைன் முறைகேடு புகார்! போக்குவரத்து காவலர் சஸ்பெண்ட்
சேலத்தில் போக்குவரத்து விதிகளை மீறியவரிடம் அபராதம் வசூலித்து விட்டு பணம் செலுத்தவில்லை என ரசீது கொடுத்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டுநர்களின் நிகழ்விடத்திலேயே அபராதம் வசூலிக்கும் ஸ்மார்ட் ஃபைன் திட்டம் அமலில் உள்ளது. அந்த வகையில் சேலம் பேருந்து நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் கோவிந்தராஜ் ஓட்டுனர் ஒருவரிடம் அபராத தொகையை பெற்றுக்கொண்டு பணம் செலுத்தவில்லை என ரசீதை கொடுத்துள்ளார்.
இந்நிகழ்வு அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளனர். இதனையடுத்து கோவிந்தராஜை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து சேலம் மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார் உத்தரவிட்டார். தொடர்ந்து கோவிந்தராஜ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




