என் மீது பழி சுமத்துபவர்கள் முட்டாள்கள்: நித்யானந்தாவின் அடுத்த அதிரடி
தன் மீது குற்றம் சாட்டுபவர்கள் முட்டாள்கள் என நித்யானந்தா தெரிவித்துள்ளார். வழக்கம்போல சமூகவலைதளத்தில் உரையாற்றிய அவர் தாமே மனிதத்தின் எதிர்காலம் என கூறினார். நித்யானந்தா கைலாசத்தில் இருக்கிறார்.
ஆனால் அந்த கைலாசா எங்கே இருக்கிறது? அது தனி நாடா? இல்லையா? போன்ற வினாக்களுக்கான விடை மத்திய, மாநில அரசுகளிடம் இல்லை. இவ்வளவு ஏன் எதைப்பற்றி தேடினாலும் ஏதேனும் ஒரு பதிலைத் தரும் கூகுளே நித்யானந்தாவின் கைலாசா இருக்கும் இடத்தை பற்றி கேட்டால் கன்ஃப்யூஸ் ஆகிவிடுகிறது.
நித்தியானந்தா எங்கு இருக்கிறார் என்பதை 12ஆம் தேதிக்குள் கண்டறிய வேண்டும் என கர்நாடக காவல்துறைக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் கெடு விதித்துள்ளது. என்ன செய்வதென கர்நாடக காவல்துறை கையை பிசைந்து கொண்டிருக்க நித்யானந்தாவோ கூலாக யூடியூபில் உரையாற்றி இருக்கிறார்.
தனது பேச்சுக்கு நடுவே அவ்வப்போது இடைவெளி விடுவது, கைகளில் அணிந்துள்ள ருத்ராட்சத்தை சரிசெய்வது, கைக்கு ஆதரவாக தண்டத்தை வைத்துக் கொள்வது என மேனலிசம் பேசுகிறார் நித்தியானந்தா. தம்மை பயன்படுத்தி பரமசிவன் இந்த உலகில் கைலாசத்தை உருவாக்குவதாக கூறுகிறார் அவர்.
கைலாசா என்பது எல்லைகளற்ற ஆன்மீக பெருவெளி எனக்கூறும் நித்தியானந்தா அதில் செல்லப்பிராணிகளை இணைக்கலாம் என கூறுகிறார். தமது புகழ் உயர்ந்து கொண்டே வருவதாக தெரிவித்த நித்யானந்தா அது எப்படி என்பதையும் விளக்கினார். கன்னித்தீவு கதை முடிந்தாலும் நித்தியானந்தாவின் கைலாசா கதை முடியாது போல.





