குளிர்பானத்தில் பூச்சி மிதந்ததால் அதிர்ச்சி
மதுரை அருகே உள்ள கடையில் வாங்கிய குளிர்பானத்தில் பூச்சி மிதந்தது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்கரை பகுதியில் கடை ஒன்றில் இளைஞர்கள் குளிர்பானம் ஒன்றை வாங்கியுள்ளனர்.
அதில் பெரிய அளவிலான பூச்சி ஒன்று இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அந்த குளிர்பானம் சோழவந்தானில் இயங்கிவரும் உள்ளூர் குளிர்பான நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட குளிர்பான நிறுவனம் மீது உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.





