--- --:--:-- --

2008-லேயே ஆசிட் வீச்சுக்கு ‘என்கவுன்ட்டர்’ – சைபராபாத் ஆணையரின் பின்னணி..!

14

தெலுங்கானா பெண் மருத்துவர் கொலை தொடர்பானவர்கள் என்கவுண்டர் செய்யப்பட்ட நிலையில் சைபராபாத் காவலாக இருக்கும் சர்ஜன் ஆர் 11 ஆண்டுகளுக்கு முன்னரே இதேபோன்றதொரு என்கவுண்டரை முன்னின்று நடத்தியது தெரிய வந்துள்ளது.

 

தெலுங்கானாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 4 பேர் என்கவுண்டர் செய்யப்பட்டதற்கு பெரும்பாலான மக்கள் வரவேற்பு தெரிவித்து இருக்கிறார்கள்.

 

இந்த வழக்கை முன்னின்று நடத்தி வரும் சைபராபாத் காவல் ஆணையர் சர்ஜன் ஆர் காவல் கண்காணிப்பாளராக இருந்த போது இதேபோன்றதொரு என்கவுண்டர் நிகழ்ந்து இருப்பது தெரியவந்துள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இரண்டு பொறியியல் மாணவிகள் மீது அமில வீச்சு நடத்தியதாக ஸ்ரீனிவாஸ், ஹரிகிருஷ்ணா மற்றும் சஞ்சய் என்ற மூன்று பேர் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

 

இவர்கள் மூன்று பேரில் ஒருவர் அமில வீச்சுக்கு உள்ளான ஒரு பெண்ணுக்கு தொல்லை அழைத்து வந்ததாகவும், அந்த பெண் நிராகரித்ததை தொடர்ந்து நண்பர்களுடன் சேர்ந்து அமில வீச்சில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

 

அமில வீச்சு சம்பவத்திற்கு பிறகு மூன்று பேரும் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். அப்போதும் சம்பவ இடத்தில் மூன்று பேரும் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்த முயன்றதாக சர்ஜன் ஆர் தெரிவித்திருந்தார்.

 

அந்த நேரத்தில் மூன்று பேர் என்கவுண்டரில் கொல்லப்பட்டதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்ததோடு மாணவிகள் இனிப்பு கொடுத்து கொண்டாடினார். இதேபோல நக்சல் தீவிரவாதியான நைமுதினை என்கவுண்டரில் சர்ஜன் ஆர் முக்கிய பங்காற்றி இருக்கிறார்.

 

ஹைதராபாத்தின் புறநகர் பகுதிகளில் சுட்டுக் கொல்லப்பட்டபோது சர்ஜன் ஆர் சிறப்பு நுண்ணறிவு பிரிவில் ஐ‌ஜி இருந்திருக்கிறார். அப்போது நைமினால் மிரட்டப்பட்டு வந்த பல தொழிலதிபர்கள் இதை வரவேற்றார்கள்.

Leave a Reply

Right Menu Icon