80களில் கண்ணழகால் ரசிகர்களை கட்டிப்போட்ட நடிகை சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாள்
எண்பதுகளில் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத கவர்ச்சி நடிகையாக விளங்கிய சில்க்ஸ்மிதாவின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. தனது கண் அழகால் ரசிகர்களை கட்டிப் போட்ட நடிகை சில்க்ஸ்மிதாவின் நடிப்பில் வெளியான பல பாடல்களை மறந்துவிட முடியாது.
ஒரு நடிகையாக அறிமுகமாகி கட்டள கால் கவர்ச்சி நடிகையாக பெயர் பெற்று மர்மமான முறையில் இறந்து போன கதைக்கு சொந்தக்காரர் சில்க். ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ஏழுறு என்ற கிராமத்தை சேர்ந்த சில்க்ஸ்மிதாவின் இயற்பெயர் விஜயலட்சுமி.
குடும்ப சூழலால் சிறு வயதிலேயே விஜயலட்சுமிக்கு திருமணம் செய்து வைக்கப்பட கணவர் மற்றும் மாமியாரின் தொந்தரவால் திக்கு முக்காடிக் கொண்டிருந்த விஜயலட்சுமியின் வாழ்க்கையை மாற்றியது வண்டிச்சக்கரம் திரைப்படம்.
விணுசக்ரவர்த்தியின் எழுத்தில் 1980 ஆம் ஆண்டில் வெளியான இந்த திரைப்படத்தில் சாராயம் விற்கும் பெண் வேடம் என்றாலும் அந்தப் படம்தான் இவருக்கு சில்க் என்னும் பெயரையும் பெற்றுத்தந்தது. கவர்ச்சி நடிகை என்ற பட்டம்.
அடுத்தடுத்த படங்கள் என தனது பாதையில் முன்னேறிக் கொண்டிருந்த சில்க் கமல், ரஜினி என அனைத்து உச்ச நட்சத்திரங்களின் படங்களிலும் தவிர்க்க முடியாதவராக உருவெடுத்தார். நீங்கள் கேட்டவை, தாலாட்டு கேக்குதம்மா போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமக்கு நடிப்பின் அனைத்து பரிமாணங்களளும் வரும் என்பதை ஆணித்தரமாக நிரூபித்தார் சில்க் ஸ்மிதா.
ஒருபுறம் தமிழ் சினிமா அவரை கொண்டாடி கொண்டு இருந்தாலும் மறுபுறம் விமர்சிக்கவும் தவறவில்லை. இந்த பரபரப்புகள் தொடர்ந்து கொண்டிருக்கும் போதே 1996 ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியானது. சில்க் ஸ்மிதா மறைந்தாலும் இன்றுவரை அவரை ரசிகர்கள் கொண்டாடி கொண்டிருப்பதே அவரது வெற்றிக்கான சான்று.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




