பெண் மருத்துவர் எரித்து கொல்லப்பட்ட விவகாரம்: 3 போலீசார் பணியிடை நீக்கம்
தெலுங்கானா மாநிலத்தில் பெண் மருத்துவர் கொல்லப்பட்டதில் நடவடிக்கை எடுக்க தாமதப்படுத்திய உதவி ஆய்வாளர் உட்பட 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அப்பெண் காணாமல் போனது குறித்து காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய தாமதப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து ஷைதராபாத் காவல் ஆணையர் விசாரணை மேற்கொண்ட நிலையில் உதவி ஆய்வாளர் ரவிக்குமார் தலைமை காவலர்கள் வேணுகோபால் மற்றும் சத்தியநாராயண கௌடா ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




