தல அஜித் அரசியலுக்கு வரக்கூடாதா? : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேள்வி
நடிகர் அஜித் அரசியலுக்கு வந்தால் ரஜினி, கமல், விஜய்யை விட முன்னோடியாக திகழ்வார் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சூசகமாக தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். ரஜினி ஒரு ஆன்மீகவாதி என்று, அவர் சொல்வது போன்று நாளை என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது எனவும் கூறினார்.
ரஜினி, கமல், விஜய் ஆகியோர் கூட்டணி அமைத்தால் அதனை எதிர்கொள்ள அதிமுக பலம்வாய்ந்த கூட்டணி அமைக்கும் என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார். ரஜினி, கமல், விஜய் தான் அரசியலில் முன்னோடியாக திகழ்வார்களா? அஜித் அரசியலுக்கு வந்தால் முன்னோடியாகத் திகழ மாட்டாரா? எனவும் கேள்வி எழுப்பினார்.





