--- --:--:-- --

அறிவு உலகமா? ஊழல் உலகமா? வேடிக்கை பார்க்க மாட்டேன்!

10

தமிழகத்தில் பிளஸ் 2 மற்றும் 10-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு த.வெ.க சார்பில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில், 2026-ம் ஆண்டு முதற்கட்ட விருது வழங்கும் விழா கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற நிலையில், 2-ம் கட்ட விருது வழங்கும் விழா இன்று (நவம்பர் 26) சென்னை நீலாங்கரையில் நடைபெற்றது.

 

இந்த விழாவில் பேசிய முதல்வர் விஜய், என் நெஞ்சில் குடியிருக்கும் என் அன்பான நண்பா, நண்பீஸ் உங்கள் அனைவருக்கும் என்னுடைய வணக்கம். உங்கள் பெற்றோர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வணக்கம்.இன்று ஒரு முக்கியமான விஷயத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நான் இதைப்பற்றிப் பேசும்போது சிலர் இதை அரசியலாக்க முயற்சி செய்யலாம். ஆனால், அதைப்பற்றியெல்லாம் நமக்குக் கவலையில்லை. யார் என்ன சொன்னாலும், என் செல்லங்களான உங்களிடம் இதைப்பற்றி நான் சொல்லியே ஆக வேண்டும். ஏனெனில், இது உங்களோடும், மாணவர்களின் எதிர்காலத்தோடும் சம்பந்தப்பட்ட ஒரு முக்கியமான விஷயம். வாழ்க்கையில் எங்கெல்லாம், எப்போதெல்லாம் நீங்கள் உஷாராக இருக்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா?

 

 

இன்றைய காலத்திற்கு ஏற்ப செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பமெல்லாம் வந்துவிட்டது;. இனி எல்லாத் துறைகளிலும் பயங்கரமான வளர்ச்சிகளைப் பார்க்கப் போகிறோம் என்று ஒரு ஆசையோடும், பெரும் எதிர்பார்ப்போடும் இருந்தேன். ஆனால், அதே ‘ஏ.ஐ’ தொழில்நுட்பத்தை வைத்துக்கொண்டே, ஆரம்பக்கட்டத்திலேயே இப்படி ஒரு ஊழலைச் செய்திருக்கிறார்கள் என்பதை நினைக்கும்போது சத்தியமாக எனக்குப் புரியவில்லை. இவர்களையெல்லாம் எங்கே கொண்டு போய் விடுவதென்றும், என்ன செய்வதென்றும் தெரியவில்லை.

 

 

கோவை பெரியார் அறிவுலகம், திருச்சி காமராஜர் அறிவுலகம், சேலம் பாரதிதாசன் அறிவுலகம், திருநெல்வேலி காயிதே மில்லத் அறிவுலகம், கடலூர் அஞ்சலையம்மாள் அறிவுலகம் ஆகியவை மாணவர்களாகிய நீங்கள் அனைவரும் படிப்பதற்காக உருவாக்கப்பட்ட நூலகங்கள். அவற்றில், கோவை பெரியார் அறிவுலகத்தில் இப்படி ஒரு முறைகேடு நடந்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இன்னும் மற்ற நூலகங்களில் என்னென்ன நடந்திருக்கிறதோ தெரியவில்லை; அவையும் ஒவ்வொன்றாக வெளியில் வரும். இவையெல்லாம் ‘அறிவு உலகமா’ இல்லை ‘ஊழல் உலகமா’ என்று எனக்குத் தெரியவில்லை.

 

 

நான் சும்மாவெல்லாம் சொல்லவில்லை; நான் அரசியலுக்கு வந்ததே ஒவ்வொரு குடும்பத்திற்காகவும், ஒவ்வொரு குடும்பத்திலும் இருக்கும் பிள்ளைகள் மற்றும் எதிர்காலத் தலைமுறையினருக்காகவும்தான். அப்படிப்பட்ட உங்களுடைய வாழ்க்கையே பாதிக்கும் அளவிற்கு இவர்கள் நடந்துகொள்ளும்போது, அதை எப்படிப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியும்? அதனால்தான் சொல்கிறேன், என்னுடைய நண்பா, நண்பீஸ்… உங்கள் அண்ணன் உங்களை எப்போதும் நல்ல வழியில் மட்டும்தான் நடத்திச் செல்வேன்.

 

 

ஊழல் என்பது ஒரு பழமையான விஷயம்தான்; மக்களும் அதற்குப் பழகிப் போய்விட்டார்கள் என்று நினைத்து நாம் அதைக் கடந்து போய்விட முடியாது. ஏனெனில், ஊழல் என்பது ஒரு தீராத நாள்பட்ட நோயைப் (Chronic Disease) போன்றது. அதைக் குணப்படுத்துவதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ, அதையெல்லாம் நாம் செய்தே ஆக வேண்டும். “இதையெல்லாம் முழுமையாகக் குணப்படுத்த முடியுமா?” என்று சிலர் தர்க்கரீதியாகக் (Logically) கேட்கலாம். முழுமையாக முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் நம்மால் அதைக் கட்டுப்படுத்த முடியும் அல்லவா? அதற்கான முதல் அடியையாவது (Step) நாம் எடுத்து வைக்கலாம் அல்லவா?

 

 

இப்படிப்பட்ட சில செயல்பாடுகளால்தான் இங்கே சிலருடைய அடித்தளமே (Basement) ஆடிப்போய்க் கிடக்கிறது. சரி, அது இப்போது இங்கே வேண்டாம். மாணவர்களாகிய நீங்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம் என்று முதல்வர் விஜய் பேசியுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon