--- --:--:-- --

தமிழகம், புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு

8

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. கடந்த மாதம் 16ஆம் தேதி தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் அரபிக்கடல் மற்றும் வங்க கடலில் அடுத்தடுத்து புயல் உருவானதால் தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்யவில்லை.

 

வங்க கடலில் உருவான புல்புல் புயல் வலுவிழந்து அதையடுத்து படிப்படியாக நிலை மாறி தமிழகம் புதுச்சேரிக்கு மழை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

Leave a Reply

Right Menu Icon