--- --:--:-- --

சொத்து விவரம் தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு.!

1

தமிழக அரசு ஊழியர்களுக்கு சொத்து விவரம் தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர்கள் IFHRMS இணையதளம் மூலம் தங்கள் சொத்து மற்றும் கடன் விவரங்களை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை அரசு நீட்டித்துள்ளது. அதன்படி, 31.12.2025-ல் முடிந்த ஆண்டுக்கான சொத்து விவரத்தை 31.10.2026-க்குள் தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்நிலையில் பல்வேறு ஊழியர் அமைப்புகள் கால நீட்டிப்பு கோரியதால், அரசு காலத்தை மேலும் 2 மாதம் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

 

இனி 2025-ம் ஆண்டுக்கான சொத்து கணக்கை டிசம்பர் 31, 2026 வரை IFHRMS-ல் தாக்கல் செய்யலாம். அதற்கு பிறகு ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31-க்குள் தாக்கல் செய்ய வேண்டும். அனைத்து துறை செயலாளர்கள், துறை தலைவர்கள், மாவட்ட ஆட்சியர்கள், TNPSC, உயர்நீதிமன்ற பதிவாளர்கள் உள்ளிட்ட அனைத்து கட்டுப்பாட்டு அலுவலர்களும் தங்கள் கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு இதை தெரிவித்து, நீட்டிக்கப்பட்ட காலத்திற்குள் தவறாமல் தாக்கல் செய்ய அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon