--- --:--:-- --

ஒர்னாப் புயல் தற்போது எங்கு உள்ளது…?

1

ஆந்திரா – ஒடிசா மாநிலங்களை அச்சுறுத்தும் ஒர்னாப் புயல் பாபட்லா – விசாகப்பட்டினம் இடையே நள்ளிரவில் கரையை கடக்க தொடங்கியது. புயல் காரணமாக காக்கிநாடா மாவட்டத்தில் உப்படா, கோனபாபேட்டா மற்றும் முலாபேட்டா கடற்கரை கிராமங்களில் கடல்நீர் குடியிருப்புக்குள் புகுந்தது. தொடர்ந்து ஆக்ரோணமாக எழுந்த ராட்சத அலைகளால் கரையோரம் மண் அரிப்பு ஏற்பட்டு வீடுகள் மற்றும் நாட்டு படகுகள் சேதமடைந்தன.

 

 

100 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கியதால் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கினர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய பேரிடர் மீட்பு படையினர் கடற்கரை பகுதிகளில் முகாமிட்டுள்ளனர்.

 

அதிகாலை 4 மணி அளவில் புயலின் மையப்பகுதி கரையை கடக்க தொடங்கிய நிலையில், இன்னும் சில மணி நேரத்தில் முழுமையாக கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 20 கிலோ மீட்டர் வேகத்தில் தீவிரமடைந்த இந்த புயலானது, மேற்கு – வடமேற்கு நோக்கி நகர்ந்து, வட மேற்கு நோக்கி திரும்பும் என கணிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடந்து வரும் நிலையில், அதன் வேகம் அதிகரித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon