--- --:--:-- --

தனுஷ் மகளிர் அணி சந்திப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

2

சென்னையை அடுத்து செம்மெஞ்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெறும் தனது நற்பணி இயக்கத்தின் மகளிர் அணி சந்திப்பு நிகழ்ச்சியில் நடிகர் தனுஷ் பங்கேற்க உள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள விஜய், கடந்த 2024-ம் ஆண்டு அரசியல் கட்சி தொடங்கி 2026 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளார். தற்போது அவர் தமிழக முதல்வராக பணியாற்றி வரும் நிலையில், விஜயின் வெற்றி தமிழ் சினிமாவில் பல நடிகர்களின் வாழ்க்கையில் அரசியல் கனவை விதைத்துள்ளது.

 

 

இந்த வரிசையில் தற்போது முன்னிலையில் இருப்பவர் தனுஷ். சமீப காலமாக தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து வந்த தனுஷ், சமீபத்தில் தனது ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றி தொண்டர்களை இணைக்கும் பணியை தொடங்கி வைத்தார். அதேபோல் விரைவில் அவர் அரசியல் கட்சி தொடங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது. தனுஷ் தரப்பில் இருந்து இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.

 

 

அதே சமயம் அவர் அவ்வப்போது டெல்லி பயணம் செல்வது, நிர்வாகிகளை சந்திப்பது என்று தொடர்ந்து அரசியலை நோக்கி செயல்பட்டு வருகிறார். அந்த வரிசையில் சமீபத்தில் டெல்லி சென்று வந்த தனுஷ் இன்று தனது நற்பணி இயக்கத்தின் மகளிர் அணி நிர்வாகிகளை சந்திக்கிறார். சென்னை செம்மஞ்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியில் சுமார் 3000 பேர் கலந்துகொள்வார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

 

 

இந்த நிகழ்ச்சிகான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பல பெண்கள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்துள்ளனர். நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் தங்கள் மொபைல்போனகளை உள்ளே எடுத்துச்செல்ல அனுமதி இல்லை என்று கூறப்படுகிறது.

 

 

இந்நிலையில், இந்த நிகழச்சியில் பங்கேற்க வந்த பெண் ஒருவர் கூறுகையில், மகளிர் அணி கூட்டம் இன்று நடக்கிறது. தனுஷ் சார் பங்கேற்கிறார். அடுத்து வருடம் அவரை தலைவராக பார்க்க போகிறோம். இந்த நிகழ்ச்சி ஒரு ஆரம்ப புள்ளி. புதிய வரவுகள், இளைஞர்கள், விஜய் சாருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள். அடுத்து இவருக்கும் ஒரு வாய்ப்பு கொடுக்கலாமே. நல்லது பண்ணும்போது கண்டிப்பாக வாய்ப்பு கொடுக்கலாம். எண்ணம்போல் வாழ்க்கை என்று கூறியுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon